ராமநாதபுரம்

இறால் பண்ணைகளால் உப்பு நீராக மாறிய ஊருணிகள்: புதுக்காடு கிராம பெண்கள் புகார்

DIN

இறால் பண்ணைகளால் ஊருணிகள் உப்பு நீராக மாறியதால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள்  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலிக்குடங்களுடன் வந்திருந்தனர்.
திருவாடானை வட்டம் ஏ.மணக்குடி ஊராட்சிக்குள்பட்ட புதுக்காடு கிராம பொதுமக்கள் மற்றும் மகளிர் மன்றத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் வந்து அமர்ந்தனர். 
அப்பெண்கள் கூறியதாவது: புதுக்காடு பகுதியில் 53-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 350-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊரில் ஊருணிகள் இருந்தும் இறால் பண்ணைகளால் அவை உப்புத்தன்மையுள்ள மண்ணாகி விட்டது. 
இதனால், அதில் தேங்கும் நீரை பயன்படுத்தமுடியவில்லை. ஊரைச்சுற்றிலும் 5-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் உள்ளதால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
ஊரில் ஆழ்துளைக் கிணறுகள், காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்பு எதுவும் இல்லை. 
இதனால், தண்ணீரை விலைக்கு வாங்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு வீட்டுக்கு தினமும் ரூ.100 கொடுத்தே தண்ணீரை வாங்கி பயன்படுத்தவேண்டியுள்ளது. குடிநீர் மட்டுமின்றி பேருந்து வசதியும் இல்லை. 
புதுக்காடு  பேருந்து நிலையத்திலிருந்துதான் கண்ணாரேந்தல், காங்காடு உள்ளிட்ட 4 கிராம பொதுமக்களும் வேறு ஊர்களுக்குச் சென்று வரவேண்டியுள்ளது. 
ஆனால், போதிய பேருந்து வசதி இல்லாததால் அவதியுறுகிறோம் என்றனர்.
அவர்கள் ஆட்சியர் கொ.வீரராகவராவைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு  நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT