ராமநாதபுரம்

பேரையூர் அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்கக் கோரிக்கை

DIN

கமுதி அருகே பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் சீரமைக்கப்படாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக பள்ளி வளாகம் மாறி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இப்பள்ளியில் 490 மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளிக்கு 30 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. இந்த நிலங்களைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் 6 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இதன் பின்னர் பள்ளி வளாகத்திற்குள் இருந்த கருவேல மரங்களை அகற்றி வாகனங்களில் ஏற்றிச் செல்ல வசதியாக பள்ளியின் சுற்றுச் சுவர் 4 இடங்களில் உடைக்கப்பட்டது. இந்த சுவர் 3 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாததால் பள்ளி வளாகத்திற்குள் கால்நடைகள் நுழைந்து, மாணவர்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் சேதமடைந்த சுற்றுச்சுவர் பகுதியில் முள்செடிகளை வைத்து, தற்காலிகமாக மாணவர்கள் அடைத்துள்ளனர். இரவு நேரங்களில் சேதமடைந்த சுவர் வழியாக பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சிலர் மது அருந்துவிட்டு, காலி பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டுச் செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT