ராமநாதபுரம்

லாரி மோதி நில அளவைத் துறை ஆய்வாளர் சாவு

DIN

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை தண்ணீர் லாரி மோதி நில அளவைத்துறை ஆய்வாளர்  உயிரிழந்தார்.
ராமநாதபுரம் அரண்மனைப் பகுதி போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (56). இவர் நில அளவைத்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவர் பணி நிமித்தமாக வெள்ளிக்கிழமை பகலில் மோட்டார் சைக்கிளில் பாரதிநகர் பகுதிக்குச் சென்றார். பின்னர் அவர் பட்டணம்காத்தான் எல்லைப் பகுதியில் ராமேசுவரம் சாலையில் திரும்பினார். அப்போது ராமநாதபுரம் நோக்கி வந்த தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி ராஜேந்திரன் உயிரிழந்தார்.
 இதில் மோட்டார் சைக்கிள் சாய்ந்ததில் அதிலிருந்த ஆவணங்கள் சிதறின. அதனடிப்படையிலேயே ராஜேந்திரன் அடையாளம் காணப்பட்டார்.  விபத்து குறித்து அறிந்து விரைந்து வந்த கேணிக்கரை போலீஸார் லாரி ஓட்டுநர் முனியசாமியை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT