ராமநாதபுரம்

கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி விழா தொடக்கம்

DIN

கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு , வேத மந்திரங்கள், மேள தாளங்கள் முழங்க, பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள நந்தவனத்திலிருந்து பல்லக்கில் கொடி கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. 
இதனையடுத்து செவ்வாய்கிழமை காலை கொடியேற்றம், பக்தர்கள் காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இத்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி, 12 நாள்கள் நடைபெறும். செவ்வாய்கிழமை இரவு ஸ்ரீமுத்துமாரியம்மன் கேடயத்தில் கோயிலை சுற்றி வலம் வந்தார். நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் நகர்வலம் வருதல் நடைபெறும்.
மார்ச் 20 ஆம் தேதி அக்னி சட்டி, பால்குடம், கரும்பாலை தொட்டில் எடுத்தும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இதனைத்தொடர்ந்து சேத்தாண்டி வேடம், கரகம், சிலம்பாட்டம், மயில், புலி, மாடு வேஷமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கடைசி நாளாக முளைப்பாரி ஊர்வலமாக வந்து, குண்டாற்றில் கரைக்கும் நிகழ்ச்சியோடு பங்குனி பொங்கல் விழா முடிவடையும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கமுதி ஷத்ரிய நாடார் உறவின் முறை நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT