ராமநாதபுரம்

ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

DIN


முதுகுளத்தூர் அருகே ரேசன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்ததால் வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் சனிக்கிழமை  முற்றுகையிட்டனர்.
முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூர் ஊராட்சியில் உள்ள பருத்திகுளம் கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள கிராம மக்களுக்கு விளங்குளத்தூர் ரேசன் கடையில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்த ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்ததால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதனால் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை பருத்திகுளம் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம்  வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன், காவல்துறை சார்பு ஆய்வாளர் கலையரசன் ஆகியோர் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் விளங்குளத்தூர் ரேஷன் கடையில் ஆய்வு செய்து தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கிராம மக்களிடம் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT