ராமநாதபுரம்

பரமக்குடியில் 13 பேர் போட்டி

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 13 பேர் போட்டியிடுகின்றனர்.

DIN

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 13 பேர் போட்டியிடுகின்றனர். அதற்கான இறுதிப் பட்டியில் வெளியிட்ட நிலையில், வேட்பாளர்களுக்கான சின்னங்களை தேர்தல் அலுவலர் சு. ராமன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
       பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், 3 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 16 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.     இந்நிலையில், அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கும் பணி நடைபெற்றது. இதில், சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர்.  
வேட்பாளர்களுக்கான சின்னங்கள்:  பி. ஹேமலதா (நாம் தமிழர் கட்சி) - கரும்பு விவசாயி சின்னம், எஸ்.சம்பத்குமார் (திமுக)- உதயசூரியன் சின்னம், என்.சதர்ன் பிரபாகர் (அதிமுக)இரட்டை இலை சின்னம், அ. சங்கர் (மக்கள் நீதி மய்யம்) டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.       
  சுயேச்சை வேட்பாளர்களான  டாக்டர் எஸ். முத்தையா (அமமுக)- பரிசுப் பெட்டி சின்னம், சண்முகராணி - வாயு சிலிண்டர் சின்னம், வாசு - தென்னந்தோப்பு சின்னம், ராதாகிருஷ்ணன் - கனசதுரம் சின்னம், எம்.பாலகிருஷ்ணன் - ஆட்டோ ரிக்ஷா சின்னம், உ.சுரேஷ் - குக்கர் சின்னம், ஆர். முத்தையா- தொப்பி சின்னம், எம். சிரஞ்சீவி -தொலைக்காட்சிப் பெட்டி சின்னம், எஸ்.முத்தையா - ரொட்டி கருவி சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT