ராமநாதபுரம்

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு

DIN

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
ராமேசுவரம் ரயில் நிலையம் முன்மாதிரி ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த ரயில் நிலையம் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை எனவும், நடைமேடைப் பகுதியில் போதிய மின் விளக்குகள் இல்லை எனவும் தொடர்ந்து பயணிகள் புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் லெனின் ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது அவர் பயணிகளின் ஓய்வு அறைகள், குடிநீர் வசதிகள், கழிப்பறைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். பின்னர் பாம்பன் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT