ராமநாதபுரம்

காட்சிப் பொருளான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

DIN

 கமுதி அருகே குடிநீர் விநியோகத்துக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்ட நாள் முதல் பயன்பாடின்றி உள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
கமுதி அருகேயுள்ள கே.நெடுங்குளம் கிராமத்தில் 70 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதிக்குத் தேவையான குடிநீர் விநியோகத்துக்காக கடந்த 2011 இல் ரூ.10 லட்சம் செலவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆழ்துளைக் கிணறு குழாய் வசதியுடன் அமைக்கப்பட்டது. ஆனால், ஆழ்துளைக் கிணற்றில் நீரூற்று இல்லாததால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்ட நாளிலிருந்தே பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது. 
இதனால், கே.நெடுங்குளம் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க முடியாமல்,  விவசாயத்துக்கான உவர் நீரை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் இல்லாததால், பலர் குடிநீர் கிடைக்காமல் ஊரைக் காலி செய்துவிட்டனர்.
எனவே, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT