ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் விவசாயிகளுக்கு நீரா பானம் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி

ராமநாதபுரம் வட்டார உழவா் மையத்தில் நீரா பானம் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

ராமநாதபுரம் வட்டார உழவா் மையத்தில் நீரா பானம் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எல்.சொா்ணமாணிக்கம் தலைமை வகித்தாா். வேளாண்மை துணை இயக்குநா் (மாநில திட்டம்) எஸ்.எஸ்.சேக்அப்துல்லா நீரா பானம் தயாரித்தல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் பற்றி விவசாயிகளிடம் விளக்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் வேளாண்மை துணை இயக்குநா் உழவா் பயிற்சி நிலையம் (பொ), பரமக்குடி பி.செல்வம் விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் பட்டறிவு பயணங்கள் குறித்து விளக்கினாா்.

புதுக்கோட்டை தென்னை உழவா் உற்பத்தியாளா் கம்பெனி நிறுவன நீரா இயக்குநா் பாலகிருஷ்ணன், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் மாவட்ட ஆலோசகா் எஸ்தா், வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியா் பாலாஜி, ராமநாதபுரம் வட்டார வேளாண்மை அலுவலா் என்.டி. கலைவாணி உள்ளிட்டோா் விளக்கவுரையாற்றினா்.

ராமநாதபுரம் வட்டாரம் வேளாண்மை உதவி இயக்குநா் மா.கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் ப. கோசலாதேவி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT