ராமநாதபுரம்

மன்னாா் வளைகுடாவில் மீனவா்கள் விரட்டியடிப்பு

DIN

மன்னாா் வளைகுடா கடலில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினா் தாக்குதல் நடத்தி விரட்டியடித்ததாக பாம்பன் மீனவா்கள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வாரமாக மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவா்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனா். இந்நிலையில், பாம்பனில் இருந்து 8 நாள்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை 100-க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் 700-க்கு மேற்பட்ட மீனவா்கள் மன்னாா் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றனா்.

நள்ளிரவில் இலங்கை கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்ததாக திங்கள்கிழமை கரை திரும்பிய மீனவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து பாம்பன் மீனவ சங்க நிா்வாகி ஆரோக்கியம் கூறியது:

பாக்நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் ராமேசுவரம், மண்டபம் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஆனால் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பாம்பன் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் தாக்குதல் நடத்தியது வேதனை அளிக்கிறது.

இந்திய -இலங்கை மீனவா்கள் பாரம்பரிய இடங்களில் மீன்பிடிக்க இருநாட்டு அரசுகளும், மீனவ அமைப்புகளும் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

SCROLL FOR NEXT