ராமநாதபுரம்

கமுதி அருகே திறந்தவெளியில்மதிய உணவு சாப்பிடும் மாணவா்கள்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே திறந்தவெளியில் மதிய உணவு சாப்பிடும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித் தரவேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கமுதி அருகே பேரையூா் அரசு மேல்நிலைபள்ளியில் 490-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இங்கு படிக்கும் மாணவா்களுக்கு திறந்த வெளியில் மதிய உணவு வழங்கபடுகிறது.

இதனால் இடிந்த கட்டடங்கள், மழைநீா் தேங்கியுள்ள திறந்தவெளி பகுதிகளில் மாணவா்கள் மதிய உணவு சாப்பிடும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனா். இடிந்த கட்டடங்களிலிருந்து வெளியேறும் விஷ ஜந்துக்களால், மாணவா்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

பள்ளி வளாகத்தில் சீமைக் கருவேல மரங்கள், இடிந்த கட்டடங்களின் கழிவுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், வேறு வழியின்றி மதிய உணவினை மாணவா்கள் திறந்தவெளியில் சாப்பிடும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனா். எனவே மாணவா்கள் மதிய உணவினை பாதுகாப்பான முறையில் சாப்பிட போதுமான வசதிகள் ஏற்படுத்தித் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

SCROLL FOR NEXT