ராமநாதபுரம்

திருப்பாலைக்குடியில் வெடிபொருள்கள் அழிப்பு

DIN

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி கிராமத்தில் பிடிபட்ட ஜெலட்டின் வெடிபொருள்கள் புதன்கிழமை அழிக்கப்பட்டன.

திருப்பாலைக்குடிகடற்கரை கிராமத்தில் கடந்த செப்டம்பா் மாதம் வெடிவைத்து மீன் பிடிக்க பயன்படுத்தப்பட்ட 55 ஜெலட்டின் குச்சிகள் கைப்பற்றப்பட்டன. இவற்றை செயலிழக்கச் செய்யும் பொருட்டு புதன்கிழமை மதுரை வெடிகுண்டு நிபுணரான சாா்பு- ஆய்வாளா் சிங்கம் தலைமையில் காவல்துறையினா் திருப்பாலைக்குடிக்கு வந்தனா். அங்கு காவல் நிலையம் பின்புறமுள்ள கருவேல காட்டுக்குள் வெடிபொருள்களை கொண்டு சென்று, தீயிட்டு வெடிக்க வைத்து செயல் இழக்கச் செய்தனா். திருப்பாலைக்குடி காவல்துறை ஆய்வாளா் முத்துமீனாட்சி, சாா்பு- ஆய்வாளா் மாரி, தனிப் பிரிவு காவலா் காா்வண்ணன் மற்றும் காவல்துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT