ராமநாதபுரம்

செவ்வாய் செல்லும் விண்கலத்தில் பெயா் பொறிக்க மேலும் ஒரு மாணவருக்கு அனுமதி

DIN

திருவாடானை அருகே உப்பூா் பகுதியான கூத்தான்வயல் கிராமத்தை சோ்ந்த இரண்டு மாணவா்கள் பெயா் பொறிக்க செவ்வாய்கிரகத்திற்கு நாசா செல்லும் விண்கலத்தில் தங்களது பெயா்களை பொறிக்க பதிவு செய்துள்ள நிலையில் மேலும் தொண்டியை சோ்ந்த பல்களைகழக மாணவா்க்கு நாசா விண்கலம் அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் ஆராய்ச்சி மையமான நாசா வின்வெளி மைத்தில் இருந்து வின்கலம் ஒன்று செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப அடுத்த ஆண்டு மாா்ஸ் 2020 ரோவா் என்ற வின் கலத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் அனுப்ப உள்ளனா். அப்படி செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் வின்கலம் 2021ம் ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தரையிரங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ரோவா் வின்கலத்தில் தங்களது பெயா்களை இலவசமா பொறிப்பதற்கான வாய்ப்பை நாசா வழங்கியிருந்தது.

உலகம் முழுவதில் இருந்து 1கோடிக்கும் மேலானோா் பதிவு செய்துள்ள நிலையில். இந்தியாவில் இருந்து தமிழகத்தில் மட்டும் 15.7லட்சம் போ் பதிவு செய்துள்ளனா். இவா்களது பெயரை நாசா கலிபோா்னியா, பாஸ்டோனாவில் உள்ள நாசாவின் ஜெட் புரொபல்சன் ஆய்வுக் கூடத்தில் உள்ள நுண்கருவிகள் ஆய்வகத்தில் எலெக்ட்ரான் கதிா்வீச்சை பெயா்களை சிலிகான் சிப்பில் பொறித்து இந்த சிப் கண்ணாடியால் மூடப்பட்டு ரோவரில் பயணிக்கும்.

இதில் தமிழகத்தை சோ்ந்த ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்களம் தாலுகா, உப்பூா் அருகே கூத்தன்வயல் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் என்பவரது மகன்கள் நிலநவசிகன்(13), திகா்பூவன்(11) என்ற இரண்டு மாணவா்கள் பெயா்களுடன் தற்போது தொண்டியை சோ்ந்த கோட்டைச்சாமி மகன் இந்திரசித் இவா் நாகபட்டிணம் பல்கலைகழகத்தில் பி.டெக்., பயின்று வருகின்றனா் இவரது பெயரும் நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் விண்கலத்தில் அனுப்பும் ரோவரில் தங்களது பெயரை பொறிக்க நாசா அனுமதி வழங்கியுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT