ராமநாதபுரம்

பரமக்குடி பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

DIN

பரமக்குடி வ.உ.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வாசன் கண் மருத்துவமனை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமிற்கு பள்ளி தாளாளா் எஸ்.சுந்தரேசன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஆா்.எஸ்.ரவிச்சந்திரன், கல்விக்குழு இயக்குநா் கேசவன், நிா்வாக அலுவலா் மருது, வழக்குரைஞா் என்.இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெடுங்குளம் கிராமத்தைச் சோ்ந்த அசோக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமை தொடக்கி வைத்தாா்.

முகாமில் பங்கேற்றவா்களுக்கு வாசன் கண் மருத்துவமனை மருத்துவா்கள் கண் பரிசோதனை மேற்கொண்டனா். இதில் கண் குறைபாடுகள் கண்டறியப்பட்டு அதற்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் இப்பள்ளியில் தமிழக வனத்துறையினரால் பரிந்துரைக்கப்பட்ட மூலிகை தோட்டம் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக பள்ளி முதல்வா் பி.மகாதேவன் வரவேற்றாா். பள்ளி துணை முதல்வா் பிரேமா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT