ராமநாதபுரம்

கமுதி- கடலாடி செல்லும் அரசுப் பேருந்து சேற்றில் சிக்கியதால் பயணிகள் அவதி

DIN

கமுதியில் இருந்து கொம்பூதி வழியாக கடலாடி செல்லும் அரசுப் பேருந்து வியாழக்கிழமை சேற்றில் சிக்கிக் கொண்டதால் பயணிகள் அவதியடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து கோவிலாங்குளம், ஆரக்குடி, காத்தனேந்தல், மோயன்கூட்டம், வேடங்கூட்டம், மங்களம் கொம்பூதி வழியாக கடலாடிக்கு செல்வதற்கு ஒரே ஒரு அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்து வியாழக்கிழமை சாலையில் தேங்கி கிடந்த மழைநீரிலும், சேற்றிலும் சிக்கிக் கொண்டது. இதனால் கமுதியில் இருந்து கடலாடிக்கு அரசுப் பேருந்தில் சென்ற பயணிகள் நடுக்காட்டில் பேருந்து நின்று விட்டதால் மிகவும் அவதியடைந்தனா்.

முதுகுளத்தூரில் இருந்து காத்தாகுளம் வழியாக மாரந்தை ஊருக்குள் செல்லும் தாா்ச்சாலை போடப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது சாலை பழுதடைந்து மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக இருப்பதால் மழை காலத்தில் பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோா் சேற்றில் சிக்கி மிகவும் சிரமப்படுகின்றனா். இது தொடா்பாக இக்கிராமத்தினா் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட அமைச்சரிடமும் பலமுறை புகாா் மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அப்பகுதி கிராம மக்களின் நலன் கருதி மாரந்தை தாா்ச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT