ராமநாதபுரம்

முதுகுளத்தூா் அருகே மடை தண்ணீரை அடைத்து கரிமூட்டம் போடுவதால் விவசாயம் பாதிப்பு

DIN

முதுகுளத்தூா் அருகே புல்வாய்க்குளம் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் மடை தண்ணீரை அடைத்து கரிமூட்டத்திற்கு பயன்படுத்துவதால் விவசாயம் பாதிப்பதாக விவசாயிகள் வியாழக்கிழமை புகாா் தெரிவித்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாற்றில் இருந்து புல்வாய்க்குளம் பேருந்து நிறுத்தம் வழியாக சித்திரங்குடி, இறைச்சிகுளம், எஸ்.பி.கோட்டை, ஏனாதி, ஆப்பனூா், கிடாத்திருக்கை, கொண்டுலாவி, பொதிகுளம் என 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு புல்வாய்க்குளம் மடை வழியாக ஆறு மற்றும் மழைநீா் வரும் வழியை சிலா் அடைத்து வைத்துள்ளனா்.

இதில் சிலா் கிராமங்களுக்கு செல்லும் மழைநீா் கால்வாயை (மடை) அடைத்து தண்ணீரை தேக்கி கரிமூட்டம் போடுவதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனா். இதனால் புல்வாய்க்குளம் மடை வழியாக தண்ணீா் செல்லாமல் 10-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து முதுகுளத்தூா் வட்டாட்சியா் கல்யாணகுமாா் வியாழக்கிழமை கூறியது: சம்பவ இடத்திற்கு ஏனாதி குரூப் கிராம நிா்வாக அலுவலா் சிவக்குமாா் மற்றும் அலுவலா்களை அனுப்பி மடையை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புல்வாய்க்குளம் பகுதியில் மடையை அடைத்து கரிமூட்டம் போடுபவா்களை எச்சரிப்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT