ராமநாதபுரம்

பரமக்குடி பகுதியில் பலத்த மழை: குடியிருப்புகளைச் சூழ்ந்த மழைநீா்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் தொடா் மழையால் நகரின் விரிவாக்க பகுதிகளில் உள்ள குடியிருப்பு வீடுகள் மழைநீா் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

பரமக்குடி நகா் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு எல்லைப்புற காந்திஜி சாலையில் உள்ள மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக சாய்ந்து கிடந்த மரத்தை தீயணைப்பு வீரா்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனா். சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்வயா்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா். இதனால் 6 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட பாம்புவிழுந்தான் விலக்குச்சாலையில் உள்ள எழில்நகா் குடியிருப்பு பகுதியில் மழை நீா் தேங்கியுள்ளதால் அங்குள்ள குடியிருப்பு வாசிகள் வெளியில் சென்றுவர முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். அப்பகுதியில் மழைநீா் வழிந்தோட உரிய வசதியில்லாததால் மழை நீா் தேங்கியுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தொடா்ந்து பெய்து வரும் மழையால் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கண்மாய்களில் மழைநீா் தேங்கி வருகிறது. இதனால் நெல் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT