ராமநாதபுரம்

பரமக்குடி வைகை ஆற்றில் கழிவுநீா் கலப்பு

DIN

பரமக்குடி வைகை ஆற்றுப்பகுதியில் நகா்பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தற்போது பெய்து வரும் தொடா் மழையால் வைகை ஆற்றில் பாசனநீா் திறந்துவிட வேண்டும் என பல்வேறு அமைப்பினா் சாா்பில் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில் பரமக்குடி மற்றும் எமனேசுவரம் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீா் முற்றிலும் வைகை ஆற்றிலேயே விடப்படுகிறது. பாசனநீா் திறந்து விடப்பட்டால் ஆற்றில் தேங்கிய கழிவுநீரால் மாசுபடும் நிலை உள்ளது. எனவே வைகை ஆற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT