ராமநாதபுரம்

மாநில அளவிலான கபடிப் போட்டி: சிக்கல் அரசுப் பள்ளி மாணவிகள் தேர்வு

DIN

கடலாடி அருகே உள்ள சிக்கல் அரசுப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான கபடிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 
 தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் 14 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான குறு வட்டார அளவிலான கபடிப் போட்டி ஆகஸ்ட் மாதம்  ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. 
இதில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை தேர்வு செய்தனர். மாவட்ட அளவில் தேர்வான மாணவிகளுக்கு மண்டல அளவிலான போட்டிக்கு சிவகங்கை கல்லூரி  மைதானத்தில் செப். 9 ஆம் தேதி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 வயதிற்குட்பட்ட பிரிவில் 143 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கடலாடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் சிக்கல் ஊரைச் சேர்ந்த தில்சாத்பேகம் என்ற மாணவியும், அதே பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் ஆண்டிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி என்ற மாணவியும் வெற்றி பெற்று பள்ளிக்குழும தென் மண்டல அளவிலான கபடிப்போட்டிக்கு தகுதி பெற்றதுடன், மாநில அளவிலான கபடிப்போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
அதற்கான சான்றிதழ்களை அம்மாணவிகளிடம் சிவகங்கை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சூரன்  வழங்கினார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்கள் பா.கோகிலா, பி.வடிவேல்முருகன் ஆகியோ ரையும் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராயர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT