ராமநாதபுரம்

கமுதி பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கக் கோரிக்கை

DIN


கமுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமபுறங்களில் பல ஆண்டுகளாக சேதமடைந்து, சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கமுதி களஞ்சிய நகர், முத்து மாரியம்மன் நகர், கோரைப்பள்ளம், கிளாமரம், நீராவி, கீழராமநதி, ராமசாமிபட்டி, கூலிபட்டி, முஸ்டக்குறிச்சி, இ.நெடுங்குளம், ஆனையூர், கொல்லங்குளம், பாக்குவெட்டி உள்பட 40-க்கும் அதிகமான கிராம, நகர்புறங்களில் வீடுகளுக்கு அருகே உள்ள மின்கம்பங்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளன. 
இதனால் சிறு காற்றடித்தாலே மின்கம்பங்கள் அசைந்தாடுகிறது. இதனால் சேதமடைந்த மின்கம்பங்கள் வழியாக மின் பழுதினை சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, பல நாள்கள் இருளில் தவிக்கும் கட்டாயம் உருவாகியுள்ளது.  
எனவே சேதமடைந்து, பொதுமக்களை அச்சுறுத்தும்வகையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

SCROLL FOR NEXT