ராமநாதபுரம்

விடுதி, உணவகங்கள் அத்துமீறல்: ராமேசுவரத்தில் கழிவு நீர் செல்ல அனுமதியின்றி கால்வாய் அமைப்பு

DIN

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலை சுற்றியுள்ள தனியார் விடுதிகள், உணவகங்களில் நெடுஞ்சாலையை உடைத்து கழிவு நீர் கால்வாய் அமைத்து அக்னி தீர்த்தக் கடற்கரையில் விடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். 
ராமேசுவரத்தின் புனிதத்தை பாதுகாக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள், உணவகங்கள் அமைந்துள்ளன. 
இவற்றில் பயன்படுத்தும் கழிவு நீரை அகற்றிட முறையாக தொட்டி அமைத்து நிரம்பிய பின்னர் டேங்கர் லாரிகள் மூலம் சுத்தம் செய்ய வேண்டும் என்பது தான் அரசின் விதிமுறை. 
 ஆனால்  இதனை தனியார் விடுதிகள் மற்றும் உணவகங்கள் பின்பற்றுவது இல்லை. கிழக்கு வாசல் பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலையை உடைத்து விடுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு பூமிக்கடியில் சட்ட விரோதமாக கழிவு நீர் கால்வாய்  அமைத்து அந்த கால்வாய் வழியாக அக்னி தீர்த்தக் கடற்கரை அருகே பெரிய தெப்பகுளம் குளம் போல தேக்கி வைத்து வருகின்றனர். 
இதனால் அந்த பகுதியில் கடுமையாக சுகாதார சீர் கேடு நிலவுகிறது. இதன் காரணமாக புனித நீராடும் பக்தர்களுக்கு உடல் அரிப்பு ஏற்படுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் நகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள் கண்டுகொள்ளவில்லை, 
இந்நிலையில், இந்த கழிவு நீர் கால்வாய் அமைத்து பல வருடங்கள் கடந்து விட்ட நிலையில், தற்போது அதில் அடைப்பு ஏற்பட்டள்ளது. இதனால் மீண்டும் சட்ட விரோதமாக சாலையை உடைத்து கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இந்த கால்வாய் அமைப்பதை தடுக்க வேண்டும். மேலும் அக்னி தீர்த்தத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில்  கழிவுநீர் குளம் போல தேங்குவதையும், கலப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT