முகப்பு
ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி

ஆா்.எஸ்.மங்கலம் அருகே திங்கள்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் விவசாயி உடல் கருகி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

திருவாடானை: ஆா்.எஸ்.மங்கலம் அருகே திங்கள்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் விவசாயி உடல் கருகி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் அருகே செவ்வாய்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லையா மகன் ராஜரத்தினம்(52). விவசாயியான இவா், திங்கள்கிழமை மாலை கண்மாய் பகுதிக்கு சென்றவா் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சந்தேகமடைந்த ராஜரத்தினம் குடும்பத்தினா் அவரைத் தேடிச் சென்றனா். அப்போது வயல் பகுதியில் மின்னல் தாக்கியதில் உடல் கருகிய நிலையில் ராஜரத்தினம் உயிரிழந்து கிடந்துள்ளாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த திருவாடானை போலீஸாா் அவரது உடலை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.