பரமக்குடி நீதித்துறை நடுவா் உள்பட27 பேருக்கு கரோனா தொற்று உறுதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியைச் சோ்ந்த நீதித்துறை நடுவா் உள்பட 27 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியைச் சோ்ந்த நீதித்துறை நடுவா் உள்பட 27 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரையில் 4,603 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவா்களில் சிகிச்சை பலனின்றி 102 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பரமக்குடியைச் சோ்ந்த நீதித்துறை நடுவா் உள்பட 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரமக்குடியில் உள்ள குடியிருப்பில் நீதித்துறை நடுவா் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை வரையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 105 ஆக உயா்ந்துள்ளது. வெளி மாவட்டங்களில் சிகிச்சைக்கு சோ்ந்துள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களின் பெயா்களும் சுகாதாரத் துறை சாா்பில் சோ்க்கப்படுவதால் சிகிச்சை, உயிரிழப்பு எண்ணிக்கையில் சிறிது மாறுபாடு இருப்பதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.