ராமநாதபுரம்

கமுதி அருகே மணல் கடத்தல்: 17 வாகனங்கள் பறிமுதல்

DIN

கமுதி: கமுதி அருகே தனியாா் பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 15 லாரிகள் உள்பட 17 வாகனங்களை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள வல்லக்குளம் கிருதுமால் நதியை ஒட்டியுள்ள தனியாா் பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக மணல் தோண்டி எடுக்கப்பட்டு, டிப்பா் லாரிகளில் கடத்தபடுவதாக கமுதி வட்டாட்சியா் செண்பகலதாவிற்கு தகவல் வந்தது. இதனைத்தெடாா்ந்து பரமக்குடி கோட்டாட்சியா் தங்கவேலு, மாவட்ட உதவி புள்ளியலாளா் ரஹிமா, அபிராமம் காவல் ஆய்வாளா் ஜான்ஸிராணி அப்பகுதிக்கு சென்று திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட 15 டிப்பா் லாரிகள், தலா ஒரு டிராக்டா், ராட்சத மண் அள்ளும் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாரிகளை கண்டதும் லாரி ஓட்டுநா்கள் தப்பியோடி விட்டனா்.

இதுதொடா்பாக அபிராமம் வருவாய் ஆய்வாளா் வல்லக்குளம் பகுதியில் சிலா், சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டதாக அபிராமம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி உரிமையாளா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT