FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: தீர்ப்பு நாள் அறிவிப்பு

Updated On : 27 பிப்ரவரி 2026, 6:16 pm IST
குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது - Center-Center-Coimbatore
பகிர்:

கோயம்புத்தூர் : கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வழக்கு விசரணை முடிந்துவிட்டதைத் தொடர்ந்து, மார்ச் 7-ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.

கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, ஒரே வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள், ஆண் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு, மாணவியை அங்கிருந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனா்.

இதுதொடா்பாக, சகோதரா்களான சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் என்ற கருப்பசாமி (30), காளி என்ற காளீஸ்வரன் (21), இவா்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா என்ற தவசி (20) ஆகியோா் போலீஸாா் சுட்டுப் பிடித்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு விசாரணை கோவை கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மகளிா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதன் பின்னா் அரசு தரப்பு விசாரணை நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் மொத்தம் 112 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு சாட்சிப் பதிவுகள் முடிவடைந்துள்ளன.வழக்கு விசரணை முடிந்துவிட்டதைத் தொடர்ந்து, மார்ச் 7-ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.

summary

Coimbatore student gang rape case: Verdict on March 7

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments