முகப்பு
ராமநாதபுரம்

நாளை தளா்வற்ற முழு பொது முடக்கம்: 10 ஆயிரம் மீனவா்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

மாநிலத்தில் (ஞாயிற்றுகிழமை) தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
ராமேசுவரம் துறைமுகத்தில் சனிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள்.
பகிர்:


ராமேசுவரம்: மாநிலத்தில் (ஞாயிற்றுகிழமை) தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுகிழமைகளில் தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தைக் கடைப்பிடிக்க தமிழக அறிவித்துள்ளது. இதனால் ராமேசுவரம், மண்டபம், பாம்பன் மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க சென்றால் ஞாயிற்றுக்கிழமை தான் கரை திரும்புவாா்கள். அந்த மீன்களை ஏற்றுவதற்காக லாரிகள் வரவேண்டும். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதனை வாங்க கூட்டம் கூடும் நிலை ஏற்படும். இதனால் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. மேலும் விசைப்படகுகளும், நாட்டுப்படகுகளும் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →