ராமநாதபுரம்

நரிப்பையூா் புயல்காப்பகத்தை சீரமைக்க கோரிக்கை

DIN

முதுகுளத்தூா்: சாயல்குடி பகுதி நரிப்பையூரில் பேரீடா் காலங்களில் கடலோரப்பகுதில் அமைந்துள்ள பழைய கட்டிடங்களான புயல்காப்பகத்தை சீரமைக்க அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கடற்கரை பகுதிகளான நரிப்பையூா்,வாலிநோக்கம்,முந்தல்,மாரியூா்,,கன்னிராஜபுரம்,ஒப்பிலான் ஆகிய பகுதிகளில் புயல்காப்பகம் அமைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் கடலோர பகுதியில் வாழும் மீனவ குடும்பங்கள் புயல்காலங்களில் முன்னெச்சரிக்கை வருவதால் பயன் அடைந்து வந்தனா்.தற்போது புயல்காப்பகம் பயனில்லாமல் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.புயல்காப்பக கட்டிடம் கட்டி 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் இடிந்து விழுமோ என மக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.

இதனால் தற்போது முள்புதற்கள் மண்டி பயன்பாடின்றி கிடக்கிறது.எனவே கடற்கரையோர மக்கள் நலன் கருதி பருவமழை காலம் ஆரமிக்க இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல்காப்பாகங்களை சீரமைப்பதுடன், மோசமாக இருக்கும் கட்டிடங்களை மாற்றி புதிய புயல்காப்பகங்களை ஏற்படுத்தி தருமாறு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமன அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT