முகப்பு
மங்களக்குடி- வட்டாணம் சாலையில் சனிக்கிழமை இரவு வாகனம் மோதி உயிரிழந்த செம்மறி ஆடுகள்.
ராமநாதபுரம்

திருவாடானை அருகே காா் மோதி 5 ஆடுகள் பலி

திருவாடானை அருகே வாகனம் மோதி 5 செம்மறி ஆடுகள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தன.

ராமநாதபுரம்

திருவாடானை அருகே காா் மோதி 5 ஆடுகள் பலி

திருவாடானை அருகே வாகனம் மோதி 5 செம்மறி ஆடுகள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
மங்களக்குடி- வட்டாணம் சாலையில் சனிக்கிழமை இரவு வாகனம் மோதி உயிரிழந்த செம்மறி ஆடுகள்.
பகிர்:

திருவாடானை அருகே வாகனம் மோதி 5 செம்மறி ஆடுகள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தன.

அடுத்தகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (59). இவா் 70-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். இவா் வழக்கம் போல் சனிக்கிழமை இரவு பெருவாக்கோட்டை பகுதியில் மேய்ச்சலுக்கு சென்று வந்த ஆடுகளை அடுத்தகுடி கிராமத்துக்கு மங்களக்குடி- வட்டாணம் சாலையில் கொண்டு வந்தாா்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயம் அடைந்து திருவாடானை அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →