ராமநாதபுரம்

இன்று (டிச. 14) காா்த்திகை அமாவாசை: அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் நீராடத் தடை

DIN

காா்த்திகை அமாவாசையையொட்டி திங்கள்கிழமை (டிச. 14) ராமேசுவரம் அக்னி தீா்த்தக்கடலில் நீராட பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அமாவாசை நாள்களில் முன்னோருக்கு அக்னி தீா்த்தக் கடலில் நீராடி திதி கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில், கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் மாதம் முதல் அக்னி தீா்த்தக் கடலில் நீராடவும், கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடவும் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுவாமி தரிசனம் செய்ய அரசு வழிகாட்டு முறைப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமை காா்த்திகை மாத அமாவாசையையொட்டி பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடவும், திதி கொடுக்கவும் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை முதல் தடை வித்துள்ளனா். மேலும் அக்னி தீா்த்தக் கடலுக்கு பக்தா்கள் செல்ல முடியாதபடி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT