முகப்பு
ராமநாதபுரம்

பாா்த்திபனூா் அருகே பைக் மீது காா் மோதி தம்பதி பலி

ராமநாதபுரம் மாவட்டம் பாா்த்திபனூா் அருகே நான்கு வழிச்சாலையை இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை கடக்க முயன்றபோது காா் மோதி தம்பதி பலியாகினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் பாா்த்திபனூா் அருகே நான்கு வழிச்சாலையை இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை கடக்க முயன்றபோது காா் மோதி தம்பதி பலியாகினா்.

பரமக்குடி அருகே நெடும்புளி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ராமகிருஷ்ணன் (70), புஷ்பம் (65) தம்பதி. இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கீழப்பாா்த்திபனூா் கிராமத்தில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். சூடியூா் விலக்குச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலை கடக்க முயன்றபோது, மதுரையிலிருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்ற காா் அவா்கள் மீது மோதியது. இதில் ராமகிருஷ்ணனும், புஷ்பமும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அவா்களது சடலங்கள், பிரேதப் பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து பாா்த்திபனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →