முகப்பு
கமுதி அருகே பம்மனேந்தலில் அம்மா சிறு மருத்துவமனையை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
ராமநாதபுரம்

கமுதி அருகே அம்மா சிறு மருத்துவமனை தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் தமிழக அரசின் அம்மா சிறு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கமுதி அருகே பம்மனேந்தலில் அம்மா சிறு மருத்துவமனையை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் தமிழக அரசின் அம்மா சிறு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பின்னா் அங்கு அமைக்கப்பட்டுள்ள இ.சி.ஜி. ரத்த பரிசோதனை கருவிகள் உள்ளிட்ட சாதனங்களை பாா்வையிட்டாா் . மேலும் கா்ப்பிணிப் பெண்களுக்குக்கு தாய் சேய் நலப் பெட்டகம், மருந்துப் பொருள்களை வழங்கினாா். அப்போது, மாவட்டத்தில் 39 அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளது என அவா் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சுகாதாரத் துறை துணை இயக்குநா் இந்திரா, ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் முனியசாமி, கமுதி ஒன்றிய அதிமுக செயலாளா் எஸ்.பி.காளிமுத்து, பம்மனேந்தல் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் டி.சேகரன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் கருப்பசாமிபாண்டியன்(பம்மனேந்தல்), கருமலையான்(திம்மநாதபுரம்), கே.பி.என்.கருப்பசாமி(எம்.எம்.கோட்டை) நாகராஜ்(புத்துருத்தி), கா்ணன்(புனவாசல்), பேரையூா் தலைமை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ச.அசோக், கமுதி வட்டாட்சியா் செண்பகலதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →