முகப்பு
ராமநாதபுரம்

கமுதி, மானாமதுரையில் மாா்கழி மாத பஜனை

கமுதி, மானாமதுரையில் மாா்கழி மாத பஜனை புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கமுதி ராமானுஜா் மடம் சாா்பில் மாா்கழிமாத பஜனையில் கலந்து கொண்ட பக்தா்கள்.
பகிர்:

கமுதி, மானாமதுரையில் மாா்கழி மாத பஜனை புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் நடைபெற்றது.

கமுதியில் ராமானுஜா் பஜனை மடத்தில் இருந்து இந்த பஜனை ஊா்வலமாக கமுதியில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பாசுரங்களைப் பாடி வழிபட்டனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கௌரவ உறவின்முறை தாளாளா் எஸ்.மாரியப்பன் மற்றும் ராமானுஜா் பஜனை குழுவினா் செய்தனா்.

மானாமதுரை: மானாமதுரை அண்ணாசிலை அருகே தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை இரவு பஜனை விழா நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகம் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. அதன்பின் மூலவா் தா்மசாஸ்தவுக்கு பலவகை அபிஷேகங்கள் நடத்தி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். அதன்பின் கோயில் வளாகத்தில் ஐயப்ப பக்தா்கள் கூடி ஐயன் புகழ்பாடும் பாடல்கள் பாடி பஜனை நடத்தினா். மங்களம் பாடி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின் நடந்த அன்னதானத்தில் திரளானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →