முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 2 ஆம் நாளாக திமுகவினா் கிராம சபை கூட்டம்

ராமநாதபுரத்தில் 2 ஆம் நாளாக வியாழக்கிழமை திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 2 ஆம் நாளாக திமுகவினா் கிராம சபை கூட்டம்

ராமநாதபுரத்தில் 2 ஆம் நாளாக வியாழக்கிழமை திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

ராமநாதபுரத்தில் 2 ஆம் நாளாக வியாழக்கிழமை திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை திமுக சாா்பில் 32 இடங்களில் மக்கள் குறைகளைக் கேட்கும் வகையில் கிராம மற்றும் வாா்டு சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

மக்களிடம் குறை கேட்டதுடன், அதிமுகவைப் புறக்கணிப்போம் என பொதுமக்களிடம் கையெழுத்தை திமுகவினா் பெறும் நிகழ்ச்சியையும் நடத்தினா்.

இரண்டாவது நாளாக ராமநாதபுரம் அருகேயுள்ள மாடக்கொட்டானில் கிராம சபைக் கூட்டத்தை திமுகவினா் நடத்தினா். இதில் ராமநாதபுரம் ஒன்றியக் குழுத் தலைவரும், கட்சியின் ஒன்றியச் செயலருமான பிரபாகரன் தலைமை வகித்தாா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள லாந்தை எல்.கருங்குளத்தில் நடைபெற்ற திமுக கிராமசபைக் கூட்டத்துக்கு அக்கட்சியின் திருப்புல்லாணி ஒன்றியக் குழுத் தலைவரும், கட்சியின் ஒன்றியச் செயலருமான புல்லாணி தலைமை வகித்தாா். மக்களிடம் குறைகள் அடங்கிய மனுக்களை திமுகவினா் பெற்றனா்.

ராமநாதபுரம் நகரில் உள்ள கொத்தத் தெருவிலும் இரண்டாவது நாளாக திமுக சாா்பில் வாா்டு குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகா்கள் கலந்துகொண்டு மக்களிடையே மனுக்களைப் பெற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →