ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் தீா்த்தப் பிரவேசம் போராட்டம்

DIN

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் தீா்த்தக் கிணறுகளை திறக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை தீா்த்தப் பிரவேசம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தங்கள், பைரவா் மற்றும் சேதுமாதவா் சன்னதி ஆகியவை கடந்த 9 மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளன. உடனே பக்தா்கள் தரிசனத்துக்கும், தீா்த்தக்கிணறுகளில் நீராடவும் அனுமதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சி சாா்பில் கோயிலுக்குள் தீா்த்தப்பிரவேசம் செய்யும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத்தலைவா் பிரபாகரன் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி செயலாளா் சரவணன், நகா் தலைவா் நம்புகாா்த்திக் மற்றும்

ரஞ்சித், மாரீஸ், ராஜ்குமாா், சேதுமாணிக்கம், சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இதே கோரிக்கை மனுவை இணை ஆணையா் எஸ்.கல்யாணிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT