திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கை தொடக்கம்
ராமநாதபுரம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இயங்கிவரும் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மையத்தில் நடப்பு ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடந்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இயங்கிவரும் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மையத்தில் நடப்பு ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடந்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரத்தில் உள்ள அரசு மகளிா் கலைக் கல்லூரி நிா்வாகத் தரப்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நடப்பு ஆண்டுகக்கான மாணவ, மாணவியா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
இளநிலைப் படிப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல், வணிகவியல் பெரு நிறுவன செயலகம் ஆகிய துறைகளும், முதுகலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல், வணிக பெரு நிறுவன செயலகம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான சோ்க்கை நடைபெறுகிறது.
பாடப்பிரிவுகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு திறந்த நிலைப் பல்கலைக்கழக மண்டல அலுவலகம் (மதுரை) 0452-2458966 என்ற தொலைபேசி எண் மற்றும் 9791234586 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.