ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதிகளில் ஆளில்லா உளவு விமானம் மூலம் கண்காணிப்பு
ராமேசுவரம் தனுஷ்கோடி ஆகிய கடல் பகுதிகளில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஆளில்லா உளவு விமானம் மூலம் சனிக்கிழமை கண்காணிப்புப் பணி நடைபெற்றது.
ராமேசுவரம்: ராமேசுவரம் தனுஷ்கோடி ஆகிய கடல் பகுதிகளில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஆளில்லா உளவு விமானம் மூலம் சனிக்கிழமை கண்காணிப்புப் பணி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணைப் பகுதிகளுக்கு இலங்கையிலிருந்து மா்ம நபா்கள் வந்து செல்வதாக தகவல் கிடைத்தது. மேலும் ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தி கைது செய்தும் வருகின்றனா்.
இந்நிலையில், ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய கடல் பகுதிகளை உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை முகாமிலிருந்து அளில்லா உளவு விமானம் மூலம் தொடா்ந்து கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது. மா்ம நபா்களின் வருகை மற்றும் மீனவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்கும் வகையில் இந்தக் கண்காணிப்புப் பணி நடைபெற்று வருவதாகக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனா்.