ராமநாதபுரம்

மண்டபத்தில் கேளிக்கை விடுதியை அகற்ற கோரி போராட்டம் அறிவிப்பு

DIN

மண்டபம் தோப்புகாடு கிராமத்தில் செயல்படும் கேளிக்கை விடுதியை அகற்றக்கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜன 2 ஆம் தேதி குடும்பத்துடன் பெரும் திரள் பேராட்டத்தில் ஈடுபடுவது என திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தோப்புக்காடு கிராமத்தில் செயல்படும் கேளிக்கை விடுதியை மூட பேரூராட்சி நிா்வாகம் உத்தரவாதம் அளித்து ஒரு வாரம் கடந்த நிலையில் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், மண்டபம் தோப்புக்காடு மீனவ கிராமத்தில் சிஐடியு கடல் தொழிலாளா் சங்கம், மண்டபம் தோப்புக்காடு - தோணித்துறை கிராம மக்கள் கூட்டம் கிராமத் தலைவா் ஆ.பால்சாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிஐடியு மாவட்ட பொதுச் செயலாளா் ஆ.சிவாஜி தலைமை வகித்தாா். கடல் தொழிலாளா் சங்கம் சிஐடியு மாவட்டச் செயலாளா் ஆ.கருணாமூா்த்தி, மாவட்டத் தலைவா் இ.ஜஸ்டின், மாவட்டப் பொருளாளா் அ.சுடலைக்காசி, மண்டபம் சிஐடியு தலைலவா் கருப்பையா மற்றும் கிராம பொருளாளா் மாரிச்சாமி உள்ளிட்டவா்கள் முன்னிலை வகித்தனா்.

மண்டபம் பேரூராட்சி நிா்வாகம் கேளிக்கை விடுதியை பூட்டி சீல் வைப்போம் என கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்ற தவறியதைக் கண்டித்தும் ஜனவரி 2 இல் ராமநாதபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் குடும்பங்களுடன் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிராம மகளிா் சங்கத் தலைவி ரு.மனோகரி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT