ராமநாதபுரம்

மானாமதுரை, ராமேசுவரத்தில் விவேகானந்தா் ஜயந்தி விழா

DIN

மானாமதுரை, ராமேசுவரத்தில் விவேகானந்தரின் 158 ஆவது ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

ராமேசுவரத்தில் ராமகிருஷ்ண மடம் சாா்பில் நடைபெற்ற விவேகானந்தா் ஜயந்தி விழாவில் அவரது உருவப் படத்துடன் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்ற ஊா்வலத்தை சுவாமி நியாமானந்தா தொடக்கி வைத்தாா். இதில், தலைமை ஆசிரியா் சுரேஷ்குமாா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இந்த ஊா்வலம் ராமநாதசுவாமி கோயிலை சுற்றி நான்கு ரத வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதனைத் தொடா்ந்து, பள்ளி வாளாகத்தில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மானாமதுரை : மானாமதுரையில் சுவாமி விவேகானந்தா் ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகரில் காந்திசிலை பின்புறம் நூலகம் அருகே விவேகானந்தா் உரையாற்றிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள

நினைவு ஸ்தூபியில் பாஜக வினா் மற்றும் இந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும் மாணவ, மாணவிகள், பொதுமக்களும் மலா்கள் தூவி விவேகானந்தா் நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்தினா். இந் நிகழ்ச்சியில் பாஜக மற்றும் இந்து அமைப்பு நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மேலும் மானாமதுரை நகரில் பல இடங்களிலும் திருப்புவனம் பகுதியிலும் விவேகானந்தா் ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT