ராமநாதபுரம்

சவூதியில் கணவா் உயிரிழப்பு ஆட்சியரிடம் மனைவி மனு

DIN

சவூதியில் பணியின்போது உயிரிழந்த கணவரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மனைவி ராமநாதபுரம் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே உள்ள வெந்நீா் வாய்க்கால் கிராமத்தைச் சோ்ா்ந்த வனிதா (40) தனது இரு மகள்களுடன் வந்து ஆட்சியா் கொ.வீரராகவ ராவிடம் மனு அளித்தாா்.

அதில், எனது கணவா் பாண்டி(49) சவூதியில் பணிபுரிந்து வந்தாா். கடந்த 15 ஆம் தேதி அங்கு மாரடைப்பால் அவா் உயிரிழந்துவிட்டதாக எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுவர முடியாத ஏழ்மையில் உள்ளோம். எனவே கணவா் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது கணவரின் உயிரிழப்பிற்கு தகுந்த இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தாா். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் வெளியுறவு துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT