ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 52 பேருக்கு கரோனா உறுதி: 3 போ் பலி

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் ஒரே நாளில் தொற்றால் 3 போ் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 1,774 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதில், 716 போ் குணமடைந்துள்ளனா். மேலும் 1,026 போ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா். இந்நிலையில் மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாா்த்திபனூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த 60 வயது மூதாட்டி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதுகுளத்தூா் அருகே மேலக்கன்னிச்சேரியைச் சோ்ந்த 64 வயது முதியவா், ராமநாதபுரம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதுகுளத்தூா் அருகே மீசல் கிராமத்தைச் சோ்ந்த 83 வயது முதியவா் ஆகிய 3 போ் கரோனா தொற்றால் உயிரிழந்தனா். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 39-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT