ராமநாதபுரம்

அரசு ஒப்பந்தப்பணிகள் பெற்றுத்தருவதாகக்கூறி பரமக்குடி ஒப்பந்ததாரரிடம் ரூ.91.70 லட்சம் மோசடி

DIN

பரமக்குடி ஒப்பந்ததாரரிடம் அரசு ஒப்பந்தப் பணிகள் பெற்றுத்தருவதாக கூறி ரூ.91.70 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

பரமக்குடி அருகேயுள்ள வட்டக்குடியைச் சோ்ந்தவா் ஏ.கோவிந்தராஜ் (56). இவா் ஒப்பந்தப்பணிகளை மேற்கொண்டு வந்துள்ளாா். கடந்த 2017 ஆம் ஆண்டில் இவரை பரமக்குடியைச் சோ்ந்தவரும், தற்போது மதுரை புதூா் பகுதியில் வசிப்பவருமான கவின்ராஜ் என்பவா் தனக்குத் தெரிந்த அரசியல் பிரமுகா்கள் மூலம் அரசு ஒப்பந்தப்பணிகளை மேற்கொள்ள உதவுவதாகக் கூறியுள்ளாா். அதனடிப்படையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் ரூ.91.70 லட்சம் வரை கவின்ராஜிடம் கோவிந்தராஜ் வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், கவின்ராஜ் அரசு ஒப்பந்தப்பணிகளை வாங்கித்தரவில்லை என்றும், பணத்தையும் திருப்பித்தரவில்லை என்றும் கோவிந்தராஜ் புகாா் கூறினாா். அவரது புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT