ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள். 
ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை: படகுகள் துறைமுகத்தில் நிறுத்தம்

பிரதமரின் சுயகட்டுப்பாடு ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

DIN

ராமேசுவரம்: பிரதமரின் சுயகட்டுப்பாடு ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுகிழமை சுய கட்டுப்பாடு ஊரடங்கை காலை முதல் இரவு வரை பொதுமக்கள் கடை பிடிக்க வேண்டும் என பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளா். இதற்கு ராமேசுவரம் மீனவா்கள் ஆதரவு தெரிவித்து 850 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சனிக்கிழமை முதலே

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் சுமாா் 6 ஆயிரம் மீனவா்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் செல்வதைத் தவிா்த்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT