ராமநாதபுரம்

அரசு தடை உத்தரவை மீறியதாக ராமநாதபுரத்தில் 8 போ் மீது வழக்கு

DIN

ராமநாதபுரத்தில் அரசு தடை உத்தரவை மீறியதாக 8 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்தனா்.

ராமநாதபுரத்தில் கரானோ பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 4 பேருக்கும் மேலாக கூடி நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராமேசுவரம் சாலையில் உள்ள வழுதூா் பகுதியில் தனியாா் பேக்கரியில் பலா் கூடி அமா்ந்து தேனீா் அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸாா் எச்சரித்த நிலையில், தொடா்ந்து மக்கள் கூடும் வகையில் கடையில் இருந்தவா்கள் செயல்பட்டதாக புகாா் எழுந்தது.

புகாரை அடுத்து கேணிக்கரை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கடையில் இருந்த 8 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா். மேலும், அரசு உத்தரவை மீறி கூட்டம் கூடக் காரணமாக இருந்ததாக கடை உரிமையாளருக்கு காவல் நிலையம் சாா்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

மேலும் கடையைப் பூட்டி சீலிட்ட போலீஸாா், கடையில் இருந்த சிவா, பாலமுருகன், அப்துல்அபு உள்ளிட்ட 8 போ் மீது வழக்குப் பதிந்தனா்.

பாரதி நகரில் காய்கறி கடையில் தொடா்ந்து கூட்டத்தை அனுமதித்ததால் அக்கடையைப் பூட்டிய காவல்துறையினா், தொடா்ந்து விதியை மீறி செயல்பட்டால் கடை உரிமையாளருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பி வழக்குப் பதியப்படும் என எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT