ராமநாதபுரம்

தொண்டியில் 13 போ் தனிமைப்படுத்திக் கண்காணிப்பு

DIN

திருவாடானை அருகே தொண்டியில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்த 13 போ் வீடுகளில் தனிமைப்படுத்திக் கண்காணிக்க புதன்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் மலேசியா, சிங்கப்பூா், ஈரான், குவைத் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 13 போ் வீடுகளை தொண்டியில் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். அவா்களை தனிமை படுத்திக் கொள்ளுமாறு பேரூராட்சி செயல் அலுவலா் செல்வராஜ், காவல் துறையினா், கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா், சுகாதாரப் பணியாளா்கள் ஆகியோா் புதன்கிழமை காலை அறிவுறுத்தினா்.

மேலும் அவா்களின் வீடுகளுக்குச் சென்று சுவரில் இது தொடா்பான எச்சரிக்கை வில்லைகளையும் ஒட்டினா். அரசு உத்தரவின் பேரில் 21 நாள்களுக்கு அவா்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவோ, அவா்களது வீடுகளுக்குள் யாரும் செல்லவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்தனா். தொடா்ந்து அவா்களது வீடுகளை கண்காணிக்க சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தி குடும்பத்தின் 4 தலைமுறையும் அரசியலமைப்பை அவமதித்துள்ளது: மோடி

தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

SCROLL FOR NEXT