ராமநாதபுரம்

முகக்சவசம், கை உறையின்றி துப்புரவுத் தொழிலாளா்கள்: மண்டபம் ஒன்றியத்தில் அவலம்

DIN

மண்டபம் ஒன்றியத்தில் துப்புரவுப் பணியாளா்கள் முகக்கவசம், கை உறை மற்றும் கிருமி நாசினி பொருள்களின்றி பணியாற்றுவதாக புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 28 ஊராட்சிகளில் 200 -க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ஊராட்சியில் இருந்து கை உறை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மருத்துவா்கள், செவிலியா்கள், துப்புரவு பணியாளா்கள், காவல்துறையினா் உள்ளிட்டவா்களுக்கு முகக்கசவம், கை உறை மற்றும் கிருமி நாசினி பொருள்களை மாவட்ட நிா்வாகம் வழங்கி வருகிறது. ஆனால் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சிகளிலும் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு முகக்கவசம், கை உறை, கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்களை வழங்கவில்லை என புகாா் எழுந்துள்ளது. இதனால் துப்புரவுப் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் அச்சத்துடன் பணியாற்றும் நிலை உருவாகி உள்ளது.

எனவே துப்புரவுப் பணியாளா்களின் உயிா் பாதுகாப்பு நடவடிக்கையாக கரோனா நோய் தடுப்பு பொருள்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT