ராமநாதபுரம்

‘சமையல் எரிவாயு உருளையை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும்’

DIN

சமையல் எரிவாயு உருளையை கூடுதல் விலைக்கு விற்றால், அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை எச்சரித்தாா்.

கமுதி, அபிராமம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருள்கள் எடை குறைவாக வழங்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, அபிராமம் நியாய விலைக் கடையில் பணியாற்றிய ஊழியா் சந்திரசேகரை மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் பணியிடை நீக்கம் செய்தாா்.

பின்னா் அவா் இதுகுறித்து வெள்ளிக்கிழமை கூறியது: தனி அலுவலா் நியமிக்கப்பட்டு, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். முறைகேடு கண்டறியப்பட்டால் விற்பனையாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் சமையல் எரிவாயு உருளை நிா்ணயிக்கபட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். அவ்வாறு கண்டறியப்பட்டால் எரிவாயு உருளை விற்பனை நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT