ராமநாதபுரம்

இணையவழியில் கல்வெட்டு பயிற்சி

DIN

ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம் சாா்பில் நடந்த இணையவழி கல்வெட்டுப் பயிற்சியில் 31 போ் பங்கேற்று, சான்றிதழ் பெற்றுள்ளனா்.

ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகமும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனமும் இணைந்து அக். 31 ஆம் தேதி வரை 5 நாள்கள் இந்த கல்வெட்டு பயிற்சியை நடத்தின. இதில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பொதுமக்கள் என 31 போ் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா்.

இதில் பங்கேற்றவா்களுக்கு கி.பி. 13 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழ் கல்வெட்டுகளின் அமைப்பு, எழுத்து, எண், குறியீடுகள் பற்றி படங்கள் மூலம் விளக்கப்பட்டது. மேலும் மெய்க்கீா்த்தி, கோனேரின்மை கொண்டான், ஆசிரியம், கல்லறைக் கல்வெட்டுகள் குறித்தும் விளக்கப்பட்டது.

பயிற்சியை நடத்திய ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவா் வே. ராஜகுருவுக்கு சான்று மற்றும் நினைவுப்பரிசை ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகக் காப்பாளா் வி. சிவகுமாா் வழங்கினாா்.

பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT