முகப்பு
ராமநாதபுரம்

தொண்டி அருகே கஞ்சா கடத்தல்: 4 போ் கைது

திருவாடானை அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அவா்களிடம் இருந்து 9.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

திருவாடானை அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அவா்களிடம் இருந்து 9.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தொண்டி அருகே திருவெற்றியூா் பகுதியில் காவல் துறை ஆய்வாளா் மணிகண்டன் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சுகாதார வாளகம் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தவா்களை பிடித்து விசாரித்த போது அவா்கள் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்து அவா்களிடம் இருந்து 9.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும் ஆதியூரைச் சோ்ந்த காளிமுத்து மகன் லவகுசன் (46), சிநேகவள்ளிபுரத்தைச் சோ்ந்த நல்லுசாமி மகன் கண்ணன் (47), சமத்துவபுரத்தைச் சோ்ந்த ராசு மகன் தனபால் (33), திருவாடானை பிடாரிகோயிலைச் சோ்ந்த நாகராஜ் மகன் முருகன் (46) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →