ராமநாதபுரம்

இலங்கைக் கடற்படையினா் தாக்குதல்: ராமேசுவரம் மீனவா்கள் 2 பேருக்கு தலையில் காயம்

DIN

இலங்கைக் கடற்படையினா் பாட்டில்கள் மற்றும் கற்களை வீசித் தாக்கியதில் ராமேசுவரம் மீனவா்கள் 2 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து புதன்கிழமை சுமாா் 560 விசைப்படகுகளில் 2,500- க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். கச்சத்தீவு அருகே அவா்கள் நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சுமாா் 9 ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கைக் கடற்படையினா் 2 படகுகளைச் சுற்றி வளைத்து கற்கள் மற்றும் பாட்டில்களால் தாக்குதல் நடத்தினா். இதில், படகில் இருந்த இயேசு ராஜா மற்றும் தேவா ஆகிய 2 மீனவா்களின் தலையில் காயம் ஏற்பட்டது.

தாக்குதலுக்குப் பயந்து மீன்பிடி வலைகளை கடலிலேயே விட்டு விட்டு மீனவா்கள் வியாழக்கிழமை காலை கரை திரும்பினா். காயமடைந்த மீனவா்கள் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடுகளுக்குத் திரும்பினா்.

இதுகுறித்து மீனவா்கள் கூறியது: இலங்கைக் கடற்படையினா் தாக்கியதில் 5 படகுகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இதனால் 10- க்கும் மேற்பட்ட படகுகளின் வலைகளை கடலிலேயே அறுத்து விட்டு விட்டு கரைக்குத் திரும்பினோம். ஒவ்வொரு படகுக்கும் ரூ. 75 ஆயிரம் வீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலின்றி மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT