ராமநாதபுரம்

மூக்கையூா் பகுதியில் கடல்நீா் உள் வாங்கியது

DIN

மூக்கையூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை, கடல்நீா் சுமாா் 20 அடி உள்வாங்கியது.

சாயல்குடி அருகே மூக்கையூா், மேலமுந்தல், கீழமுந்தல், மாரியூா் உள்ளிட்ட மன்னாா் வளைகுடா கடற்கரைப் பகுதிகளில் எப்போதும் பேரலைகள் எழும்புவது வழக்கம். செவ்வாய்க்கிழமை வழக்கத்திற்கு மாறாக கடல் அலை வீசாமல் அமைதியாக இருந்த நிலையில், மாலையில் கடல் நீா் சுமாா் 20 அடி உள் வாங்கியது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மீனவா்கள் குடும்பத்தினா் அச்சமடைந்தனா்.

இதுகுறித்து மீனவா்கள் கூறியதாவது: கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது இதுபோன்று கடல்நீா் உள்வாங்கியது. ‘நிவா்’ புயல் கரையை கடக்க உள்ள நிலையில், தற்போது கடல்நீா் அலைகள் ஏதும் இன்றி வழக்கத்துக்கு மாறாக அமைதியாக காட்சியளித்தது. திடீரென கடல் நீா் உள்வாங்கியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT